தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 13/05/2013 அன்று பேட்டை கிளை பகுதில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் வீடுகளில் இருந்த இனைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டன.
பெண்கள் கோடை கால பயிற்சி வகுப்பு – நிறைவு.
மாற்று மத தாஃவா- கிருஸ்தவரிடம் தாஃவா
புத்தக விற்பனை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட பேட்டை கிளை சார்பாக நாமக்கல் பேட்டை பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நுலைவு வாயில் அருகே கடந்த 03/05/2013 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்து சுன்னத் ஜமாஅத் சகோதரர்கள் வெளியே வரும் போது அவர்க்ளிடையே புத்தகங்கள் தலா ரூ.2/- என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. பெருவாரியான சகோதரர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். சுமார் ரூ. 2500/- மதிப்பு புத்தகங்கள் சலுகை விலையில் விற்கப்பட்டன.
கோடைக்கால பயிற்சி வகுக்கு- பெண்கள்
கடந்த 26/04/2013 அன்று காலை 10 மணியள்வில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட கணேசபுரம் கிளையில் பெண்களுக்கான 10 நாள் கோடை கால பயிற்சி வகுப்பு ஆரம்பம் ஆனது. இதில் மாவட்ட தலைவர் ஜஹாங்கிர் உசைன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார் அதைத்தொடர்ந்து முன்னால் மாவட்ட தலைவர் முஹம்மத் ஆசிஃப் அவர்களும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 50க்கும் அதிகமான மானவிகள் பங்கேற்றுள்ளனர்.
ஷிர்க்குக்கு எதிரான தீவிர தாஃவா 24/04/2013
நாமக்கல் மாவட்ட தாஃவா 23/04/2013
பேட்டை கிளை ஷிர்க் குறித்து தாஃவா
பெண்கள் பயான் – பேட்டை கிளை- 19/04/2013
கடந்த 19/04/2013 வெள்ளிக்கிழமை மக்ரீபுக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட பேட்டை கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சபுராமா அவர்கள் இறையன்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்லாஹுவின் மீது அடியார்கள் எப்படி அன்பு வைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் அடியார்கள் மீது எவ்வாறு அன்பு செலுத்துகிறான் என்பது குறித்தும் சிறப்பாக விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் முப்பதுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
மாற்று மத தாஃவா – 17/04/2013
கடந்த 17/04/2013 புதன்கிழமை மாலை மக்ரீபுக்கு பின் சண்டிகரில் தொழில் செய்யும் ரவி என்ற மாற்று மத சகோதரருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட முன்னால் தலைவர் முஹம்மத் ஆசிப் அவர்களும் மாவட்ட துனை செயலாளர் சையத் அபு தாஹர் அவர்களும் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினர்


























































